மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தினால், தென், வடகிழக்கு, மேற்கு மாநிலங்கள் பாதிக்கப்படும்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப்.2 மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக் கையை 50சதவீதம் அதிகரிப்பதற்கு வகை செய்யும் மசோதாவை அரசு முன்மொழிந்துள்ளது சிறிய மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அரசு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும்போது ஆண்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தொகுதி மறுவரையரை செய்து மக்கள வையின் மொத்த இடங்களை 50சதவீதம் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப் படுகின்றது. இந்நிலையில் மக்கள வையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50சதவீதம் அதி கரிக்கவும், ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையையும் 50 சதவீதம் அதிகரிக்கவும் வகை செய்யும் ஒரு மசோதாவை பிரதமர் மோடி அரசானது வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயலுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50சதவீதம் அதிகரிக்கும் ஒரு மசோதாவை மோடி அரசு வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முயலுகின்றது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையையும் 50 சதவீதம் அதிகரிப்பதற்கு இந்த மசோதா முன்மொழிகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை அதிகரிப்பது என்பது சமத்துவமானது என்ற வாதம் ஏமாற்றுத்தனமானது. மக்களவையில் பல்வேறு மாநி லங்கள் தற்போது கொண்டுள்ள எண்ணிக்கைக்கு இடையிலான இடைவெளியில் ஏற்படும் எந்த வொரு அதிகரிப்பும் தென் இந்திய மாநிலங்களை பாதகமான சூழலில் தள்ளிவிடும். தென், வடகிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சிறிய மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் வகையிலான ஒரு சட்டத்தை பிரதமர் மோடி தன்னிச் சையாக தயாரித்து வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *