தி.மு.க. சார்பில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் பி.கே. சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வழக்குரைஞர்
கே.எஸ். ரவிச்சந்திரன், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் அ.பு. பூர்ணிமா, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் கார்த்திக் மோகன் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். அவர்கள் வெற்றி பெற தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
