சென்னை, ஏப்.2- அனைத்து தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நாளை (3.4.2026) கலந்துரையாடுகிறார்.
கலந்துரையாடல்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்கள் முழுவ துமாக உள்ள நிலையில் தேர் தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. அந்தவகையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பணிகளை முடித்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. அதோடு மட்டுமல்லாமல், தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டது.
தேர்தல் பிரசாரத்துக்கு முந்தைய அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து விட்டு, தற்போது தேர்தல் பிரசாரங்களில் தொகுதி வாரியாக மேற்கொள்ள தொடங்கி விட்டது. அந்தவ கையில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் (31.3.2026) திருவாரூரில் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அனைத்து தொகு திகளிலும் தி.மு.க. நிர்வாகிகளுடன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் கலந்துரையாட இருப்ப தாக தி.மு.க. தலைமைக் கழ கம் அறிவித்துள்ளது.
கட்சி நிர்வாகிகளுடன்…
இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்து தொகுதிகளிலும் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் வருகிற 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். அப் போது, ஒவ்வொரு சட்டமன் றத்தொகுதியளவிலும் ஓரிடத் தில் தக்க ஏற்பாடுகளைச் செய்யும்படி மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், கட்சி வேட்பாளர் கள், பகுதி, நகரம், ஒன் றியம், வட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதிக்கான வேட் பாளர்கள் அனைவரும் தவ றாமல் கலந்துகொள்ளவேண் டும். காணொலி இணைப்பு தலை மைக் கழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
