அம்பலப்படுத்துகிறார் பொருளாதார வல்லுநர் பர்கலா பிரபாகர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு!

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை!

புதுடில்லி, ஏப்.2  2024 ஆம் ஆண்டு நடை பெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அம்பலப்படுத்தினார் பொருளாதார வல்லுநர் பர்கலா பிரபாகர்.

டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பொருளாதார வல்லுநர் பர்கலா பிரபாகர் முன்வைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் வரு மாறு:

2024 ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில், குறிப்பாக நள்ளிரவில் பதிவான வாக்குகளில் பெரிய அளவில் குளறுபடிகள் மற்றும் ‘‘அசாதாரண’’ தேர்தல் முறைகள் இருப்பதாக பிரபல பொரு ளாதார நிபுணர் பர்கலா பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திராவில் வாக்குப்பதிவு முடிந்த பிறகும், மே 13-14 நள்ளிரவு 11.45 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சுமார் 3,500 வாக்குச் சாவடிகளில் 17 லட்சத்திற்கும் அதிக மான வாக்குகள் (மொத்த வாக்குகளில் சுமார் 4.16%) பதிவாகியுள்ளன.

6 வினாடிகளில் ஒரு வாக்கு

நள்ளிரவிற்குப் பிறகு, ஒவ்வொரு 20 வினாடிக்கும் ஒரு வாக்கு வீதம் பதிவாகி யுள்ளதாகவும், சில இடங்களில் இது
6 வினாடிகளாகவும் இருந்ததாகக் கூறி, இவ்வளவு குறைந்த நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வாக்களிப்பது சாத்திய மற்றது என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மாறிய வாக்கு சதவீதம்

மே 13 அன்று மாலை 5 மணிக்கு 68.04% ஆக இருந்த வாக்குப்பதிவு, இரவு 11.45 மணிக்கு 76.50% ஆகவும், நான்கு நாட்களுக்குப் பிறகு 81.79% ஆகவும் தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டது, இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இந்தத் தரவுகள் குறித்து தேர்தல் ஆணை யத்திடம் புகார் அளித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று பர்கலா பிரபாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *