பெங்களுரு, ஏப். 1 பெங்களுரு பி.இ.எஸ். பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர் ஒருவரை, வகுப்பறையிலேயே ‘பயங்கரவாதி’ என்று அழைத்து அவமானப்படுத்திய பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முரளீதர் தேஷ்பாண்டே இவர் பெங்களுருவில் உள்ள் பி எஇஎஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
இவர் ‘‘ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இது ஒன்று பாகிஸ்தான் இல்லை’’ என்றும், ‘‘அசைவம் சாப்பிடுபவர்கள் வன் முறையில் ஈடுபடுவார்கள். ஆகை யால் தான் தீவிரவாதிகள் அனை வருமே முஸ்லீம்களாக உள்ளனர்’’ போன்ற நச்சுக் கருத்துகளை தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்து விவாதத்திற்கு உள்ளானவர்.
சென்ற வாரம் இவரது வகுப் பில் அனைவரிடமும் என்ன என்ன சாப்பிட்டுவந்தீர்கள் என்று கூறுமாறு அனைவரிடமும் கேட்கும் அவர் முதலில் ஒரு முஸ்லீம் மாண வரிடம் கேட்டுள்ளார். அவர் ‘‘இறைச்சி உணவு சாப்பிட்டு வந்தேன்’’ என்று கூறிய உடனே நேரடியாக ‘‘நீங்கள் எல்லாம் தீவிரவாதிகள் நான் ஏற்கனவே கூறினேனே தீவிரவாதிகள் எல்லாம் இறைச்சி உண்பவர்கள் இதோ எடுத்துக்காட்டு’’ என்று கூறினார்.
மேலும் அந்த இஸ்லாமிய மாணவனை எந்தவிதக் காரணமுமே இல்லாமல் சத்தம் போட்டு திட்ட ஆரம்பித்தார். இதை வகுப்பறையில் படிக்கும் சக மாணவர் ஒருவர் படம் பிடித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த மோசமான நிகழ்வு குறித்து தேசிய மாணவர் யூனியன் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. மாணவர்களை மதரீதியாகப் பாகுபடுத்துவதும், இழிவுபடுத்துவதும் கண்டிக்கத்தக்கது என அந்தப் புகாரில் தெரிவிக்கப் பட்டது. புகாரைத் தொடர்ந்து, பல் கலைக்கழக நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி பேராசிரியர் முரளிதர் தேஷ்பாண்டேவை பணியிடை நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டது. கல்வி நிலையங்களில் மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டிய பேராசிரியரே இத் தகைய வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது சமூக வலை தளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
