அமெரிக்க இந்து பவுண்டேசன் செயலாளர் போதைப்பொருள் கடத்தலில் கைது!

1 Min Read

டெக்சாஸ், ஏப்.1- அமெரிக்க இந்து பவுண்டேசனின் முக்கிய நபரும் அமெரிக்க யங் இந்து ஆர்கனைசேசன் (இளம் அமெரிக்க இந்துக் குழு) செயலாளருமான விரிந்தா பாரேக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லப்பக் கவுண்டி பகுதியில் 19 வயதுடைய விருந்தா பரேக்   என்ற இந்திய குஜராத்தி இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் இவர் மீது சாட்டப்பட்டுள்ளது.

பொதுவாக அமெரிக்காவில் கைது செய்யப்படும் நபர்களின் ஒளிப்படங்கள் மற்றும் விவரங்கள் பொது ஆவணங்களாக  வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த கைது அறிக்கையும் வெளியாகியுள்ளது. இவர் அமெரிக்க இந்து அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் இளையோர்கள் துவங்கியுள்ள இந்திய அமைப்பான யங் இந்து ஆர்கனைசேசனின் செயலாளராகவும் உள்ளார்.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வெளிநாட்டில் இருப்பவர்களை அமெரிக்காவிற்குள் நுழையவைத்து அவர்களுக்கு புகலிடம் வழங்கும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மீண்டும் அதே அமைப்பைச்சேர்ந்த பெண் போதைப்பொருள் வழக்கில் கைதுசெய்யப்பட்டது –- அமெரிக்கவாழ் குஜராத் இந்துக்கள் பெரும் அதிர்ச்சியால் தலையைத் தொங்கப் போட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *