கடவுள் சக்தி இவ்வளவுதான்! பீகார் நாளந்தா கோவிலில் கூட்ட நெரிசல் 9 பெண்கள் உயிரிழப்பு: 5 பேர் கவலைக்கிடம்

1 Min Read

பாட்னா, ஏப்.1 பா.ஜ.க. கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ளது மா ஷீத்லா கோவில். இந்தக் கோவிலில் (மக்ரா கிராமத்தில்) நேற்று (31.3.2026) காலை சிறப்புப் பூஜை நடைபெற்றது. ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியதாலும், பூஜை செய்ய முன் னேறியதாலும் கோவில் வாசல் முன்பு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மயக்கமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பெண்களின் நிலைமை கவலைக்கிட மாக இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை நேரில் பார்த்த நபர் கூறுகையில், “ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  இது வழக்கமா னது தான். சைத்ரா  மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் மார்ச் 31 அன்று வழக்கத்தை விட கூட்டம் மிக அதிகமாக இருந்தது. முறையான வரிசை அமைப்பு இல்லாததும், காவல்துறையினர் இல்லாததும் கூட்ட நெரிசலுக்குக் காரணம் ஆகும்” என அவர் குற்றம்சாட்டினார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளந்தாவில் சிதிலங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளார். இதனால், மாவட்டத்தின் மூத்த அதிகாரிகள் அனைவரும் குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் பணிகளில் ஈடு பட்டிருந்தனர். இதனால் ஷீத்லா கோவிலில் பாதுகாப்பு பற்றாக்குறை ஏற்பட்டது. கூட்ட நெரிசலுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் இந்த விபத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே போல உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 6 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப் படும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *