வல்லம், ஏப். 7- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரவியல் துறை சார்பாக 31.3.2023 அன்று தேசிய அளவிலான மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் பதிவா ளர் முனைவர் பூ.கு.சிறீவித்யா தலைமையேற்க, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப புல முதன் மையர் பேரா எஸ்.செந்தமிழ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
திருச்சி பாரத பகுமின் (பிஎச் இஎல்) நிறுவனத்தின் தொழில் நுட்ப தயாரிப்புகள் பிரிவு பொது மேலாளர்கே.ரவீந்திரன் கருத்தரங் கினை துவக்கி வைத்தார். அவர் தமது உரையில், இந்தியா 2035க் குள் 23000 எம் எம் எரிசக்தி இலக்கை கொண்டு பயணிப்பதால், இயந்திரவியல் மற்றும் மரபு சாரா ஆற்றல் துறையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளதை குறிப்பிட்டு மாணவர்கள் அத்த கைய படிப்புகளை சிறப்பாக பயி லுமாறு அறிவுறுத்தினார்.
கல்விப்புல முதன்மையர் ஏ.ஜார்ஜ் தலைமையேற்க, பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனை வர் எஸ்.வேலுசாமி நிறைவுரை யாற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இக்கருத்த ரங்கில் பல்வேறு கல்வி நிறுவனங் களில் இருந்து 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பய னடைந்தனர். நிகழ்ச்சிகளை இயந் திரவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.