புதுடில்லி, மார்ச் 31- அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால், மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கே அதிக பாதிப்பு ஏற்படும் என மாநிலங்களவை சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவுக்கு இருக்கும் சவால் குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய கபில் சிபல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்த சில அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88.6 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.
இந்தியா நாளொன்றுக்கு இறக்குமதி செய்யும் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயில், 30 லட்சம் பேரல் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மட்டுமே வருகிறது.
விலை உயர்வு: போர் பதற்றத்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 160 அமெரிக்க டாலராக உயர்ந்தால், இந்தியா 60 சதவிதம் கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்.
எண்ணெய் கையிருப்பு விஷயத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்:
“நெருக்கடி காலங்களில் மட்டுமே பிரதமர் மோடி ‘டீம் இந்தியா’ பற்றிப் பேசுகிறார். ஆனால் மற்ற நேரங்களில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் திட்டமிடலில் அத்தகைய ஒருங்கிணைப்பு இருப்பதில்லை,” என்று கபில் சிபல் விமர்சித்தார்.
சீனா போன்ற நாடுகள் மாற்று வழிகளில் கச்சா எண்ணெயைப் பெறுவதாகவும், ஆனால் இந்தியா இத்தகைய உலகளாவிய மோதல் களால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய சூழலில் இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
