இஸ்ரேல் விவகாரத்தில் மோடிக்கு துணிச்சல் இல்லை ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்

1 Min Read

புதுடில்லி, மார்ச் 30– மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செயல்பாடுகளைக் கண்டிக்க பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) தளத்தில் பதி விட்டுள்ளதாவது: கடந்த நான்கு வாரங்களாக உலக நாடுகளின் கவனம் முழுவதும் ஹார்முஸ் நீரிணை மற்றும் வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீதே குவிந்துள்ளன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, காசா மக்கள் மீதான கொடூரத் தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டிய முக்கிய அம்சங்கள்:

இடைநிலை மண்டலம்:

தெற்கு லெபனானில் தனக் கான ஒரு பெரிய இடைநிலை மண்டலத்தை உருவாக்கும் பணி களை இஸ்ரேல் தொடங்கியுள்ளது.

1967ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் பெரும்பகுதியை நிலப்பதிவு செய்ய இஸ்ரேல் அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாலஸ்தீனர்கள் வெளியேற்றம்:

இந்த நடவடிக்கையால் லட்சக் கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கள் பூர்வீகச் சொத்துகளை இழந்து, வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள்.

“மேற்குக்கரையை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொள்ளும் பணிகளை இஸ்ரேல் தீவிரமாகச் செய்து வருகிறது. ஆனால், இவ்வளவு கொடூரங்களை அரங்கேற்றி வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகக் குரல் கொடுக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் துணிச்சல் இல்லை,” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *