சென்னை, மார்ச் 29 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக-வின் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (28.3.2026) வெளியிட்டார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக 164 இடங்களில் திமுக போட்டியிடுகின்றது. இதில், பாஜகவுடன் 18 தொகுதிகளில் திமுக நேரடியாக பாஜகவுடன் போட்டியிடுகின்றது. அந்த தொகுதிகளின் விவரங்கள்,
- மைலாப்பூர், 2. அவினாசி, 3. திருப்பூர் தெற்கு, 4. கோவை வடக்கு, 5. திருப்பத்தூர், 6. புதுக்கோட்டை, 7. சாத்தூர், 8. திருச்செந்தூர், 9. வாசுதேவநல்லூர், 10. ராதாபுரம், 11. நாகர்கோவில், 12. ஆவடி, 13. திருவண்ணாமலை, 14. தஞ்சாவூர், 15. திருவாரூர், 16. மானாமதுரை, 17. ராமநாதபுரம், 18. ராசிபுரம்
இதுமட்டுமின்றி, திமுக வின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் நிற்கும் மதிமுக நேரடியாக 2 தொகுதிகளில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுகின்றது.
- மதுரை தெற்கு – மதிமுக (உதயசூரியன்)
- மொடக்குறிச்சி – மதிமுக (உதயசூரியன்)
இதில், திமுக மட்டும் 18 தொகுதிகளும் மதிமுக போட்டியிடும் இரு தொகுதிகளும் சேர்த்து மொத்தமாக 20 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னமும் பாஜகவின் தாமரை சின்னமும் நேரடியாகப் போட்டியிருகின்றன.
