தி.மு.க. – பா.ஜ.க.  நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகள் எவை!?

1 Min Read

சென்னை, மார்ச் 29 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக-வின் வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (28.3.2026) வெளியிட்டார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் போக 164 இடங்களில் திமுக போட்டியிடுகின்றது. இதில், பாஜகவுடன் 18 தொகுதிகளில் திமுக நேரடியாக பாஜகவுடன் போட்டியிடுகின்றது. அந்த தொகுதிகளின் விவரங்கள்,

  1. மைலாப்பூர், 2. அவினாசி, 3. திருப்பூர் தெற்கு, 4. கோவை வடக்கு, 5. திருப்பத்தூர், 6. புதுக்கோட்டை, 7. சாத்தூர், 8. திருச்செந்தூர், 9. வாசுதேவநல்லூர், 10. ராதாபுரம், 11. நாகர்கோவில், 12. ஆவடி, 13. திருவண்ணாமலை, 14. தஞ்சாவூர், 15. திருவாரூர், 16. மானாமதுரை, 17. ராமநாதபுரம், 18. ராசிபுரம்

இதுமட்டுமின்றி, திமுக வின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் நிற்கும் மதிமுக நேரடியாக 2 தொகுதிகளில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுகின்றது.

  1. மதுரை தெற்கு – மதிமுக (உதயசூரியன்)
  2. மொடக்குறிச்சி – மதிமுக (உதயசூரியன்)

இதில், திமுக மட்டும் 18 தொகுதிகளும் மதிமுக போட்டியிடும் இரு தொகுதிகளும் சேர்த்து மொத்தமாக 20 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னமும் பாஜகவின் தாமரை சின்னமும் நேரடியாகப் போட்டியிருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *