பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்தது ரஷ்ய அரசு! – இந்தியாவை பாதிக்குமா?

1 Min Read

புதுடில்லி, மார்ச் 29– அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த தால் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையாக உள்ள ஹார்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கியது.

ஹார்மூஸ் நீரிணையை ஈரான் முடக்கியதால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்நாட்டுச் சந்தை யில் எரிபொருள் விலை உயர்வைத் தடுக்க, பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஏப்ரல் 1 முதல் 4 மாதங்களுக்குத் ரஷ்ய அரசு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்குப் போர்ச் சூழல், சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்புப் பணிகள், எண்ணெய் சந்தையில் நிலவும் நிலையற்றத் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரஷ்ய அரசு இந்த நடவடிக் கையை எடுத்துள்ளது.

இதனிடையே இந்தியாவிடம் கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான கையிருப்பு உள்ளதாகவும், அதே நேரத்தில் திரவ இயற்கை எரிவாயு (LNG) மற்றும் திரவ எரிவாயு (LPG) விநியோகம் தடையின்றி தொடரும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *