வாசிங்டன், மார்ச் 28– ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ஏற்கனவே அதிபர் டிரம்ப் தெரிவித்த காலக்கெடு முடியும் முன்பே மேலும் 10 நாட்கள் தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதி விட்டுள்ள அவர், ஈரான் அரசின் வேண்டுகோளுக்கு இணங்க எரிசக்தி ஆலைகளை தாக்கும் காலகட்டத்தை 10 நாட்களுக்கு, அதாவது 6.11.2026 அன்று இரவு 8 மணி வரை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். போலி செய்தி மற்றும் பிறரால் இதற்கு மாறாக தவறான அறிக்கைகள் வெளியிடப்பட்ட போதி லும், பேச்சுவார்த்தை மிகவும் சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
