பிரம்மபுத்ராவில் சீனா கட்டிவரும் பிரம்மாண்ட அணையால் இந்தியாவுக்கு பேரழிவு ஏற்படும் அபாயம்! ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி

2 Min Read

புதுடில்லி, மார்ச் 28- மக்களவையில் நேற்று (27.3.2026) தி.மு.க. மக்களவை மூத்த தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் கீர்த்தி வர்தன்சிங் அளித்த பதிலும் வருமாறு:

சீனா கட்டி வரும் அணை

உலகின் மிகப்பெரிய அணையை இந்திய எல்லையில் இருந்து 50 கிலோ மீட்டர் அருகில் சீனா தனது எல்லைப் பகுதியான திபெத் மாகாண த்தில் ஓடும் பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே அமைத்து வருவதாகவும், அதனால் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் பேரழிவு விளைவிக்கும் ஆபத்து உள்ளதாகவும் பல்வேறு அச்சு ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகள் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதா?  அப்படியானால், இந்த அணைத் திட்டத்துக்கு இந்தியாவின் எதிர்ப்புகள் சீன அரசிடம் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள் ளதா?  அதன் விவரங்கள் என்ன?

இந்த கேள்விக்கு நேற்று (27.3.2026) ஒன்றிய வெளியுறவுத் துறையின் இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மக்களவையில் பதில் அளித்து பேசியதாவது:-

திபெத் பகுதியில் யார்லுங்க் சாங்க்போ நதியில், அதாவது பிரம்மபுத்ரா ஆற்றின் மேலோ டைப் பகுதியில்  மிகப்பெரிய அணை கட்டும் பணிகளை சீன அரசு தொடங்கிய செய்திகளை இந்திய அரசு தன் கவனத்தில் கொண்டுள்ளது.

இந்த அணை தொடர்பான தகவல்கள் 1986 ஆம் ஆண்டு தொட்டே வந்த வண் ணம் உள்ளன.  எனவே, அப்போ திருந்தே இந்த திட்டத்தின் கீழ் அமைய உள்ள புனல் மின் உற்பத்தி நிலையம் பற்றிய தகவல்கள், மற்றும் அணைக் கட்டமைப்பினால் கீழோடையான  பிரம்மபுத்ரா பாயும் இந்திய நிலப் பகுதிகளுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள் குறித்தும்  அரசு  கண்காணித்து வருவதுடன், இந்திய மக்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல் அவர்தம் வாழ்வாதாரங்கள் மீதான தாக்கத்தை எல்லாம் எதிர்கொள்ளவும் உரிய திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுபோன்ற எல்லை கடந்த நதிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இந்தி யாவில் அமைந்துள்ள நதியின் கீழோடைப் நிலப் பகுதி வாழ் மக்களின் நிலைநாட்டப் பட்ட  நதிநீர் உரிமைகள்  குறித்த இந்திய அரசி்ன் கவலைகள் அனைத்தும் சீனாவிடம் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக 2006 ஆம் ஆண்டில் நிறுவன ரீதியாக உருவாக்கப்பட்ட ஒரு இருநாடுகளின்  “நிபுணர்கள் நிலை அமைப்பு”( Institutionalised  Expert  Level Mechanism)வாயிலாகவும் தூதரகத் தொடர்புகள் மூலமாக வும் இந்த பிரச்சினை சீன அரசு டன் பலமுறை  விவாதிக்கப் பட்டுள்ளன.

சீன அதிபருடன்
பிரதமர் மோடி பேச்சு

மேலும்,  சென்ற 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று, சீனாவில் உள்ள டியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ( ஷாங்காய் கோ ஆபரேஷன் ஆர்கனைசேசன் ) கூட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சீன அதிபர் ஜீ ஜிங்க் பின் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதும் இந்த அணை தொடர்பான பிரச்சினையையும் இந்திய அரசி்ன் கவலை குறித்தும் எடுத்துரைத்தார் என அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தனது விரிவான பதிலில் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *