கொல்கத்தா, மார்ச்.28- மேற்கு வங்காளத்தில் துணை வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பா. ஜனதா மற்றும் தேர்தல் ஆணை யம்மீது முதலமைச்சர் மம்தா கடுமையாக சாடியுள்ளார்.
துணை வாக்காளர் பட்டியல்
மேற்குவங்காளத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சந் தேகத்துக்குரிய சுமார் 32 லட்சம் பேரின் விவரங்களை நீதித் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இதில் பரிசீலனை முடித்து முதல் கட்டதுணை வாக்கா ளர் பட்டியல் கடந்த 23ஆம் தேதி இணையதளத்தில் வெளி யிடப்பட்டது. இதில் நீக்கப்பட்ட மற்றும் சேர்க்கப்பட்டோரின் விவ ரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வ மாக வெளியிடவில்லை.
அதற்குள் 2-ஆவது கட்ட துணை பட்டியலை நேற்று (27.3.2026) வெளியிடுவதாக தேர்தல் ஆணையம் அறி வித்தது.
இதைத்தொடர்ந்து முழுமை யான மற்றும் இறுதி பட்டியலை வெளியிடாத தேர்தல் ஆணையம்மீது முதலமைச்சர் மம்தா கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் பா.ஜனதா இருப்ப தாக கூறி அந்த கட்சி மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.
பா.ஜனதாவின்
அழித்தொழிக்கும் எந்திரம்
இது தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பது, சூப்பர் ஹிட்லர்க ளின் செயல்களையும் மிஞ்சும். இந்த முழு நடவடிக்கை யும் பா.ஜனதா வின் அழித்தொழிக் கும் எந்திரமாக மாறி விட்டது.
அவர்கள் ஜனநாயகத்தையும், மக்கள் உரிமைகளையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது எனக்கு வெறுப்பும், அவமானமும் ஏற்படுகிறது. பா.ஜனதா தன்னை இந்த நாட்டின் ‘ஜமீன்தார் கள்’ என்று கருதுகிறதா?
50 சதவீத வாக்காளர் நீக்கம்
முதலாவது துணை வாக்காளர் பட்டியல் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அது இன்னும் பொதுவெளியில் இல்லை. இதை விட பெரிய ஜனநாயக படுகொலை எதுவும் இருக்க முடியுமா?
இந்த பட்டியல் எப்போது வெளியிடப்பட்டிருக்க வேண்டும்? உச்சநீதிமன்றம் எப்போது தீர்ப்பு வழங்கி யது? கடைசியாக பிப்ரவரி 28-ஆம் தேதி பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, தீர்ப்பு வழங்கும் பணி கள் தொடங்கின. தற்போது அந்தப் பட்டியலிலிருந்து சுமார் 50 சதவீத வாக்காளர்களை நீக்கிவிட்டதாக நான் கேள்விப்பட்டேன்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சுதி வட்டாரத்தில், ஒரு குறிப் பிட்ட வாக்குச்சாவடியில் இருந்த 500 பேரில் சுமார் 400 பேரின் பெயர்கள் நீக்கப் பட்டதாக கேள்விப்பட் டேன்.
ஜனநாயக உரிமை
இதையெல்லாம் செய்தது யார்? மக்கள் விரைவில் இதற்கான பதிலை கேட்பார்கள். வாக்காளர் பட்டிய லில் சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப் பட்டவர்கள் குறித்த விவரம் அவர்களுக்கு தெரியட்டும், அப்போது அவர்கள் கேட்பார்கள்.
பெயர் நீக்கப்பட்டவர்கள் தீர்ப்பாயங்களில் முறையிட அனுமதிக்கப்படுவர். இதற்காக அவர்களுக்கு நாங்கள் இலவச மாக வழக்குரைஞர்களை அமர்த்துவோம். குடிமக்களின் ஜன நாயக உரிமையை யாரும் பறிக்க விடமாட்டோம்.
இவ்வாறு மம்தா கூறினார்.
