கீழடி, மார்ச் 28– கீழடியில் நடந்து வரும் 11ஆம் கட்ட அகழாய்வில் ஒரே இடத்தில் குவியலாக சாய கிண்ணங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு 2024 ஜூன் 18இல் தொடங்கி 2025 ஜூலை வரை 11 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்தன.
11ஆம் கட்ட அகழாய்வு கடந்த மார்ச் 18ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட அகழாய்வில் கண்டறி யப்பட்ட செங்கல் கட்டு மானத்தின் தொடர்ச்சியை கண்டறியும் பொருட்டு அதே இடத்தில் 11ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
கஜேந்திரன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் எட்டு குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக இரண்டு குழிகள் தோண்டும் பணி நடந்தது.
இதில் இரண்டடி ஆழத்தில் ஒரே இடத்தில் குவியலாக அய்ந்திற்கும் மேற்பட்ட சாய கிண்ணங்கள் கண்டறியப் பட்டன.
இதுதவிர கிண்ணங்களின் அருகிலேயே சிறிய அளவிலான சுடுமண் பானைகளின் ஒரு பகுதியும் வெளிப் பட்டுள்ளது.
மேலும் குழிகளில் சிதிலமடைந்த செங்கற்கள், பானை ஓடுகள் உள்ளிட்ட வைகளும் வெளிப்பட்டு வருகின்றன.
