போராட்டக்காரர்களுக்கு வந்த பணம் குறித்த சான்றுகளைத் தாருங்கள்
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் வெளிநாட்டுச் சதி இருப்பதாகவும், வெளி நாட்டில் இருந்து பல கோடி ரூபாய்கள் போராட்டக்காரர்களுக்கு வந்ததாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் நேரடியாக வருவதில்லை; ஒன்றிய அரசின்கீழ் வரும் தன்னாட்சி அமைப்பான ரிசர்வ் வங்கியின் அனுமதியின் பேரில்தான் வரும். ஆகவே ஆளுநர் ரிசர்வ் வங்கியிடம் கேட்டு, எங்கிருந்து போராட்டக்காரர்களுக்குப் பணம் வந்தது என்பதை வெளியிட்டால் நல்லது.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலை, ஆளும் பாஜகவிற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் நன்கொடை வழங்கி உள்ளது. இது அக்கட்சி யின் இணையதளத்தில் உள்ளது. 2013-2014 ஆம் ஆண்டில் மட்டுமே அதாவது பாஜக ஆட்சிக்கு வருவதற்கு ஓராண்டிற்கு முன்பாகவே ரூ.15,00,00,000 (பதினைந்து கோடி ரூபாய்) கொடுத் துள்ளது. இங்கே 2009-2010 ஆம் ஆண்டு 8 கோடி ரூபாய், 2013-2014 ஆம் ஆண்டு 15 கோடி ரூபாய் என்று மொத்தம் 23 கோடி ரூபாய் நிதியை, ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திடமிருந்து பாஜக பெற்றது. இதற்கான சான்றை அருகே காணுங்கள். இப்படி ஆதாரங்கள் பொதுவெளியில் வந்துவிடக்கூடாது என்றுதான் தேர்தல் பத்திரங்கள்மூலம் நிதி பெறும் முறையை பாஜக அறிமுகப்படுத்தியது.