அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு
சென்னை, ஏப். 8-சென்னை கிண்டி திரு. வி.க. தொழிற்பேட்டையில் அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப் பினர்கள் வைத்த விவாதத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆற்றிய பதில் உரை வருமாறு:
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கி அதிகவேலைவாய்பை வழங்குவதில் எங்கள் துறை முனைப்புடன் செயல்படு கிறது. 4 சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட் டம், பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத் தும் திட்டம் ஆகிய திட்டங் களில் ரூ.656.27கோடி மானியத்துடன் ரூ.1,817 கோடி வங்கி கடனுதவி வழங்கி 22 ஆயிரத்து 425 இளை ஞர்கள் புதிய தொழில்முனை வோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சுய வேலைவாய்ப்பு திட்டமான ‘நீட்ஸ்’ திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.163கோடிக்கு மேல் மானியம் வழங்கப்பட்டு ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 6,938 பெண்களுக்கும் 2,344 தாழ்த்தப்பட்ட சமூகத்தின ருக்கும், பழங்குடியினருக்கும். 1619 சிறுபான்மையினர், மாற்றுத்திற னாளிகளுக்கும் ரூ.320.11 கோடி மானியத்துடன் ரூ.993கோடி வங்கி கடனுதவி வழங்கி 10 ஆயி ரத்து 901 புதிய தொழில் முனை வோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு சாதனை மைல் கல்லாகும்.
சென்னை கிண்டி திரு. வி.க. தொழிற்பேட்டையில் டான்சிக்கு சொந்தமான இடத்தில் 200 தொழில்முனைவோருக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.175 கோடி செலவில் அடுக்குமாடி தொழில் வளாகம் உருவாக்கப்படும். இத னால் 2,200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 12 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். குறு, சிறு நிறுவனங்களுக்காசு ஒசூரில் தாய்கோ வங்கிக் கிளை தொடங்கப்படும்.
– இவ்வாறு அவர் கூறினார்.