சுயமரியாதைச் சூறாவளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி நினைவு நாள்  பொதுக் கூட்டம் (28.3.2026) பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்

1 Min Read

பெரியார் பெரும்படையின் பெருந்தளபதி

சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி

பகுத்தறிவைப் பரப்பிட பம்பரமாய் சுற்றியவர்

பெரியாரின் கொள்கைக் குண்டேற்றிய பீரங்கி

அய்யாவின் அறிவுக்கருத்தை அண்டபிண்ட

சராசரங்களுக்கு அப்பாலே வீசியவர்

எதிர்ப்புகளை சாம்பலாக்கிய எரிமலை

ஈரோட்டுப் பாசறையின் போராயுதம்

பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின்

நினைவுநாளில் தமிழ்நாடு – புதுவை உள்பட

அஞ்சாநெஞ்சன் அழகிரியின் பணித் திறத்தை

–  சிறப்பிக்கும் வகையில் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் ஆணைப்படி  நினைவுநாள் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அஞ்சா நெஞ்சனின் நினைவு நாளில் (28.3.2026) தஞ்சை வடவாற்றங்கரையில்  அமைந்துள்ள அழகிரி நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து  வீர வணக்கம் செலுத்த உள்ளார்கள்.

ஆசிரியர் அவர்கள் நாளை (28.3.2026) மாலை  பட்டுக் கோட்டையில்  அஞ்சா நெஞ்சனின் நினைவு நாள்  கூட்டத்தில் கலந்து கொண்டு, வீர வணக்க உரையை நிகழ்த்த உள்ளார்கள்.

அருகமைந்த மாவட்டங்களின் கழகத் தோழர்கள் கூடிட – திராவிடர் பேரினம் திரண்டிட நடைபெறும் விழாவில்  தமிழர் தலைவர் அவர்கள் உணர்ச்சிமிகு வீர வணக்க உரை நிகழ்த்த உள்ளார்.

அஞ்சா நெஞ்சன் தொண்டறம் போற்றிட அனைவரும் வருக!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *