ஜெனீவா, மார்ச் 27- சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அய்.கு. ஏர் நிறுவனம் உலக காற்றுத் தர அறிக் கையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான பட்டி யலை அது வெளியிட்டது. புதிய அறிக்கையின்படி பாகிஸ்தான் உலகின் மிகவும் மாசுபட்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வங்காளதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தஜிகிஸ்தான் நாடு 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியா 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் லோனி நகரம் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனப் புகை, தொழிற்சாலைக் கழிவுகள், கட்டுமானப் புழுதி மற்றும் பயிர்க் கழிவுகளை எரித்தல் ஆகியவை தெற்காசியாவில் காற்று மாசிற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.உலகளவில் 143 நாடுகளில் வெறும் 13 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் காற்றுத் தர வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய
ஈரான் மக்களுக்குத் தடை
கான்பேரா, மார்ச் 27- ஈரான் நாட்டவர் சுற்றுலா விசா மூலம் ஆஸ்திரேலியா வருவதற்கு 6 மாத கால தடையை அந்த நாட்டின் அரசு விதித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து ஈரான் நாட்டவர்கள் 7,200 பேர் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய சுற்றுலா விசாவுக்கு விண்ணபித்திருந்தனர்.
போர்ப் பதற்றம் மற்றும் நிலையற்ற சூழல் காரணமாக சுற்றுலா விசாவில் வருபவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பாமல் ஆஸ்திரேலி யாவிலேயே தங்கிவிடக்கூடும் என்று அந்த நாட்டின் உளவுத்துறைக்கு துப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அடுத்த 6 மாதங்களுக்கு ஈரான் நாட்ட வர்களுக்கு விசா அளிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா விற்குள் இருக்கும் ஈரானியர்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
