2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் முதலிடம்

2 Min Read

லண்டன், மார்ச் 27– 2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் விமான நிலையம் தொடர்ந்து 13ஆவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. சியோல் விமான நிலையம் 2ஆவது இடத்திலும் டோக்கியோ 3ஆவது இடத்திலும் உள்ளன. ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் தகவல்.

ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) என்பது லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு விமானப் போக்குவரத்து தரநிர்ணய ஆலோசனை நிறுவனமாகும். 1989இல் நிறுவப்பட்ட இது, உலகெங்கிலும் உள்ள விமான நிறுவ னங்கள் மற்றும் விமான நிலையங்களின் தரம், சேவை, மற்றும் வாடிக் கையாளர் அனுபவத்தை மதிப்பாய்வு செய்து நட்சத்திரங்கள் வரை தரவரிசைப்படுத்துகிறது. இது “விமானத்துறையின் ஆஸ்கார்” எனப்படும் உலகளாவிய விருதுகளை வழங்குகிறது.

இது ஏர்லைன்ஸ் மற்றும் ஏர்போர்ட்டுகளுக்கு தொழில்முறை ஆய்வுகளின் அடிப்படையில் ‘Certified Airport Rating’ மற்றும் ‘World Airline Awards’ வழங்குகிறது. விமானப் போக்குவரத்துத் துறையில் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்து வதற்காக, தரமான தரவு மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது. பயணிகளின் கருத்துக்களை அடிப்படை யாகக் கொண்டு, விமா னச் சேவை குறித்த வெளிப் படையான தகவல்களை இது தொகுக்கிறது.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் (Changi Airport), 2026-ஆம் ஆண்டிற்கான ஸ்கைடி ராக்ஸ் (Skytrax) உலக விமான நிலைய விருதுகளில், உலகின் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந ்தெடுக்கப்பட்டுள்ளது. இது இந்த உயரிய விருதை வெல்லும் 14ஆவது முறையாகும். சிறந்த உணவகங்கள், கழிவறை வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்காக இது முதலி டத்தைத் தக்கவைத்துள்ளது.

2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து முதலிடம் பிடித்து, 2024இல் இருந்த 2ஆவது இடத்திலிருந்து மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகின் சிறந்த விமான நிலையம் (2026), ஆசியாவின் சிறந்த விமான நிலையம், சிறந்த உணவகம் மற்றும் குடிவரவு (Immigration) சேவைக்கான விருதுகளை வென்றுள்ளது.’ஜுவல்’ (Jewel) பகுதியின் பிரம் மாண்டமான உள்அரங்க நீர்வீழ்ச்சி (Rain Vortex) மற்றும் பசுமையான தோட்டங்கள் பயணிகளை ஈர்க்கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *