மகளிர் இடஒதுக்கீடு: அரசியல் ஆதாயம் தேடும் மோடி! காங்கிரஸ் கட்சி விமர்சனம்!

1 Min Read

புதுடில்லி, மார்ச் 27– மகளிர் இட ஒதுக்கீடுபற்றி ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கட்சி எழுதியுள்ள கடிதம்பற்றி, அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று (26.3.2026) கூறியதாவது:–

எல்பிஜி காஸ் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே மோடி, மகளிர் இடஒதுக்கீடு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். நாரி வந்தன் அதினி யம் மசோதா(பெண்கள் இடஒதுக்கீடு 2023),மக்களவை, சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

மகளிர் இட ஒதுக்கீட்டை உடன டியாக கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. அப்போது, தொகுதி மறுவரையறை, மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிக்காமல் இதை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று அரசு அப்போது தெரிவித்தது.

பல்டி அடிப்பதில் வல்லவரான மோடி 30 மாதங்களுக்கு பின்இப்போது தனது மனநிலையை மாற்றி கொண்டு தொகுதி மறுவரையறை முடிக்காமல், மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கா மல் பெண்கள்இடஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்புகிறார்.

இப்போது சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் ஆதாயத்துக்காக அவர்(மோடி), நாரி வந்தன் அதினியம் 2023 மசோதாவில் தேவையான திருத்தங்களை செய்யஅடுத்த2 வாரங்க ளில் இரண்டு நாள்சிறப்பு அமர்வு கூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டம் தேர்தல் நடத்தை விதியை மீறும் நடவடிக்கை. இதனால் ஏப்ரல் 29 ஆம் தேதி தேர்தலுக்கு பின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *