கொல்கத்தா, மார்ச் 26 மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப் பட்டிருந்த 7 துணை ராணுவ வீரர்கள், இப்தார் விருந்தில் பங்கேற்றனராம்!
இப்தார் விருந்து
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சில இஸ்லாமிய வீரர்கள், ரம்ஜான் நோன்பு முடிப்பதற்காக இப்தார் விருந்து ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம், சம்பந்தப் பட்ட 7 வீரர்கள் மீதும் உடனடி ஒழுங்கு நடவடிக்கையைப் பரிந் துரைத்தது. அதன் அடிப்படையில்: விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி, ஏழு வீரர்களில் இருவர் தற்போது மத்தியப் படைகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய அய்ந்து வீரர்கள் உடனடியாக மேற்கு வங்க மாநில தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநிலத்திற்கு வெளியே வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.:
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில்:
“தேர்தல் பணியில் ஈடுபடுத் தப்படும் வீரர்கள் எக்காரணம் கொண்டும் உள்ளூர் சமூக நிகழ்ச் சிகளில் பங்கேற்கக் கூடாது; குறிப்பாக, உள்ளூர் நபர்களிடமிருந்து எந்தவொரு விருந்தோம்பலையும், உபசரிப் பையும் ஏற்றுக்கொள்வது தேர்தல் ஆணையத்தின் வழிகாட் டுதல்களுக்கு எதிரானது. நடு நிலையை உறுதிப்படுத்தவே இந்த கடுமையான விதிகள் பின்பற்றப்படுகின்றன,” என்று தெரிவித்தார்.
நடுநிலை என்பது சரியாகப் பட்டாலும் மதக்கடமையை ஆற்றுவது இந்திய அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்ட உரிமை ஆகும். தங்களுக்கான உரிமைகளை நிறைவேற்ற சென்ற வீர்ர்கள் மீது பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளைப் பெற பாஜகவிற்கு சாதகமான தேர்தல் ஆணையமே நடந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக் கின்றனர்
