கரோனா தொடர்ந்து அதிகரிப்பு பரிசோதனை விகிதத்தை அதிகரிக்க வலியுறுத்தல்

2 Min Read

அரசியல், இந்தியா

புதுடில்லி, ஏப்.8- நாடு முழுவதும் நேற்று (7.4.2023) நிலவரப்படி புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகா தார அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையில், “நாடு முழு வதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6.155 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள் ளது. மொத்தம் 31,194 பேர் கோவிட் சிகிச்சையில் உள்ளனர். 

இதனால் இதுவரை நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண் ணிக்கை 4,47,51,259 ஆக அதி கரித்துள்ளது.

கோவிட் தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.  தேசிய அள விலான கரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிபி1.16 திரிபு: XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் இந்தி யாவில் கரோனா பரவல் அதிகரிக்கக் காரணமாக உள்ளது. ஙீஙிஙி வைரஸ் என் பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ் களில் இருந்து உருமாறிய வைர ஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3 மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவம் என்று தெரிய வந் துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸின் மர பணு மாற்றமான XBB 1.16 என்ற வைரஸ்தான் தற் போது நிறைய பேரை பாதிக்கக் காரணமாக இருப்பது மரபணு பகுப் பாய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கோவிட் தொற்று அதிக ரித்து வரும் சூழலில், ஒன் றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலை மையில் டில்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகா தார அமைச்சர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

இதில் அமைச்சர் மாண் டவியா பேசியபோது, ‘‘8 மாநிலங் களில் கரோனா பாதிப்பு அதிக மாக உள் ளது. கேரளா, மகாராட் டிரா, டில்லியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மாவட் டங்களில் பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ளது. கருநாடகா, இமாச்சலப் பிரதே சம், தமிழ்நாடு, அரியாணாவில் 5-க்கும் மேற்பட்ட மாவட் டங்களில் பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் உள்ளது. 

எனவே மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை உறுதிசெய்ய அனைத்து மருத்துவ மனைகளிலும் ஏப்.10, 11-ல் அவசர கால ஒத்திகை நடத்த வேண் டும்.

 10 லட்சம் பேருக்கு 100 பரிசோதனை கள் என்ற தற்போதைய விகி தத்தில் இருந்து பரி சோதனை விகிதத்தை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *