இலங்கையில் சீனா அமைக்கிறது ரேடார் தளம்

2 Min Read

ராமேசுவரம்,ஏப்.8- இலங்கை யின் அம்பாந் தோட்டை துறை முகத்தில் சீனா வின் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண் காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ கடந்த 2022 ஆகஸ்டில் நங்கூரமிட்டது.

இந்த சீன உளவு கப்பலின் வருகை, இந்தியாவுக்கு, குறிப் பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாது காப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத் தலை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர். சீனாவின் இந்த நட வடிக்கைக்கு இந்தியா கவலையும் ஆட்சேபமும் தெரிவித்தது. எனி னும், இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பல் தொடர்ந்து ஒரு வார காலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிலை நிறுத் தப்பட்டு, தனது பணியை முடித்து விட்டே திரும்பிச் சென்றது.

இந்நிலையில் இலங்கையில் சீனா 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகேயுள்ள இலங்கையின் தென்முனையான தொன்ட்ரா விரிகுடா கடற் பகுதியில் சீனா தனது அறிவியல் அகாடமி விண்வெளி தகவல் ஆராய்ச்சி மய்யம் மூலம் ரேடார் தளம் அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு மிக அண்மையில் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந் திருக்கும் 6 கடற்படைத் தளங் களிலிருந்து இயங்கும் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படைகளின் ரோந்து கப்பல்கள், படகுகளின் இயக் கத்தை சீன ரேடார் தளத்தால் துல்லியமாக கண்காணிக்க முடி யும். அது போல இந்திய பெருங் கடலில் பயணிக்கும் கப்பல் களையும் அவற்றால் கண் காணிக்க முடியும்.

மேலும் இந்தியப் பெருங் கடலில் தொன்ட்ராவிலிருந்து, தென் மேற்கே 2,500 மைல் தொலைவில் அமைந்துள்ள பிரிட்டனுக்குச் சொந்தமான ‘டியாகோ கார்சியா’ தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத் தையும் உளவு பார்க்க முடியும் எனவும், இந்திய பெருங்கடலில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு எதி ரான உளவு தகவல்களை சேகரிக் கவும் முடியும் எனவும் கூறப்படு கிறது. இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக சீனா உள்ளது. அதுபோல இலங்கையின் தற் போதைய பொருளாதார நெருக் கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடன் வழங்கி உள்ள துடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளது.

இந்தப் பின்னணியில், தொன்ட்ரா விரிகுடாவில் சீனா வுக்கு ரேடார் தளம் அமைக்க அனுமதி வழங்கினால் இந்திய-இலங்கை உறவில் பாதிப்பு ஏற் படுத்துடன் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்படக்கூடும் என அஞ்சப் படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *