அசாம் பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தி கடைசி நாளில் காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் மனுத் தாக்கல் செய்த அமைச்சர்

1 Min Read

கவுகாத்தி, மார்ச் 25- அசாம் மாநில கேபினட் அமைச்சர் நந்திதா கர்லோசாவுக்கு தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு வழங்காததால், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடைசி நாளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அசாம் மாநிலத்தில் அடுத்த மாதம் 9ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இங்கு திமா ஹசோ மாவட்டத்தின் ஹப்லாங் தனித் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நந்திதா கர்லோசா. இவர் பா.ஜ.க. அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தார்.

இந்த முறை ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த பலருக்கு பா.ஜ.க. மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. சில புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஹப்லாங் தொகுதியில் நந்திதா கர்லோசவுக்கு பதிலாக ரூபாலி லங்தசா என்பவர் பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். இதையடுத்து பா.ஜ.க. கட்சியில் இருந்து விலகிய நந்திதா, காங்கிரஸ் கட்சியில் நேற்று முன்தினம் (23.3.2026) இணைந்தார். காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஹப்லாங் தொகுதி வேட்பாளராக நிர்மல் என்பவரை அறிவித்திருந்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள்.

பாஜக.வில் அமைச்சராக இருந்து பிரபலமான நந்திதா கர்லோசா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதால், இவரையே ஹப்லாங் தொகுதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்தது.

இதையடுத்து அவர் 23.3.2026 அன்று ஹப்லாங் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மனு செய்தார். இவரது வரவால் ஹப்லாங் பழங்குடியினர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இவர் பாஜக.வில் இருந்து வெளியேறியது,
பி.ஜே.பி.க்கு பின்னடை வாக பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *