அய்தராபாத், மார்ச் 23 தெலங்கானா மாநிலம் உய்யூர் அடுத்த ஆகனூரைச் சேர்ந்தவர் பிரசாத் ராவ். இவரது மனைவி மணி. இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காவி உடை அணிந்த 4 சாமியார்கள் மந்திரங்களை உச்சரித்தபடி மணி வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டில் தனியாக இருந்த மணியிடம் எங்களுக்கு ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் உள்ள பசுக்களைப் பராமரிக்க ரூ.ஒரு லட்சம் தர வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு மணி தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்தார். இதனைக் கேட்ட சாமியார்கள் பணத்தைத் தரவில்லை என்றால் ‘சாபம் விட்டு’ நாசமாக்கி விடுவேன் என மிரட்டல் விடுத்தனர். இதனைக் கேட்டு பயந்து போன மணி, வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்தை சாமி யார்களிடம் கொடுத்தார்.
அப்போது வீட்டிற்கு வந்த மணி யின் மருமகன் வெங்கட சிவராம கிருஷ்ணா விடமும் ரூ.ஆயிரத்தை பறித்துக் கொண்ட னர். இதுகுறித்து மணியும், அவரது மருமகனும் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். உதவி ஆய்வாளர் சுபாஷினி வழக்குப் பதிவு செய்து சாமியார்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியது.
