சென்னை, மார்ச் 22 தமிழ்நாட்டில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாதுகாப் புப் பணிகளில் ஈடுபட விருப்ப முள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகக் கூடுதல் பணியாளர்களைத் திரட்டும் முயற்சியில் சென்னை காவல்துறை இறங்கியுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஆர்வமுள்ள கீழ்க்கண்ட பிரிவினர் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்:முன்னாள் ராணுவ வீரர்கள்.முன்னாள் துணை ராணுவப் படை வீரர்கள். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட சென்னை காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் பிரிவு ஆய்வாளரை நேரில் அணுகி, வரும் 26-ஆம் தேதிக்குள் தங்கள் பெயர் மற்றும் முகவரியைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்குத் தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்படும் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: மண்டல வாரியாகப் பெயர் பதிவு செய்யத் தொடர்பு கொள்ள வேண்டிய தேர்தல் பிரிவு ஆய்வாளர்களின் விவரம்: மண்டலம் ஆய்வாளர் பெயர் தொலைபேசி எண்வடக்கு மண்டலம் ஆனந்த் 94981 45519 மேற்கு மண்டலம் சாந்தினி தேவி 98401 06030 கிழக்கு மண்டலம் பத்மகுமாரி 94981 97388 தெற்கு மண்டலம் துர்கா தேவி 94980 03162 தேர்தல் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய முன்னாள் வீரர் களின் ஒத்துழைப்பைச் சென்னை காவல்துறை கோரியுள்ளது.
