அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் தலைமையில் 6 கட்சிகள் கூட்டணி – தொகுதிப் பங்கீடு நிறைவு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குவஹாத்தி, மார்ச் 22  அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள் ளது. 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

பாஜக தலைமையிலான அரசை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைமை யில் ஆறு கட்சிகள் கைகோர்த்துள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

காங்கிரஸ்: 87 தொகுதிகள் ரஜோர் தள் (ஆர்.டி.) 11 தொகுதிகள் அசாம் ஜாதிய பரிஷத்: 10 தொகுதிகள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் சிபிஅய்எம் 2 தொகுதிகள் அனைத்துக் கட்சி மலைப் பகுதி தலைவர்கள் மாநாட்டு கட்சி: 2 தொகுதிகள் சிபிஅய் (எம்.எல்): கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் நட்பு ரீதியான போட்டி: ரஜோர் தள் கட்சிக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், கூடுத லாக 2 தொகுதிகளில் காங்கிரஸும் அக்கூட்டணியும் நேரடியாக மோதிக் கொள்கின்றன.

சிறையிலிருந்து போட்டியிடும் அகில் கோகோய்

ரஜோர் தள் கட்சித் தலைவர் அகில் கோகோய், தற்போது சிறையில் இருந்த படியே தனது தற்போதைய தொகுதியான சிறீசாகரில் மீண்டும் போட்டியிடுகிறார்.

மார்கரீடா தொகுதியில் மாற்றம்

காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட பிரதீக் விலகியதை அடுத்து, அந்தத் தொகுதி ரஜோர் தள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் மற்றும் அகில் கோகோய் இடையே உடன்பாடு கையொப்பமானது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *