பாலியல் குற்றவாளி ஜோதிடருடன் நெருக்கம் மகாராட்டிர மகளிர் ஆணைய தலைவி பதவி விலகல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, மார்ச் 22 மகாராட்டிராவில் மெர்ச்சன்ட் நேவியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி அசோக் கரத், தனக்கு ‘தெய்வ சக்தி’ இருப்பதாகக் கூறி ஜோதிடராக மாறி ஜோதிடம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் 35 வயது பெண் ஒருவரை மூன்று ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில், கடந்த 18.3.2026 அன்று நாசிக்கில் வைத்து காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.

விசாரணையின் போது இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவில், சுமார் 58 ஆபாச காட்சிப் பதிவுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

கைது செய்யப்பட்ட அசோக் கரத்துடன் மகாராட்டிர மகளிர் ஆணைய தலைவி ரூபாலி சக்கங்கர் நெருக்கமாக இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

பெண்களுக்கு நீதி வழங்க வேண்டிய பதவியில் இருப்பவர், பாலியல் குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என பலர் சாடினர். குறிப்பாக காங்கிரஸ், உத்தவ் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

இந்த விவகாரம் மாநில அளவில் சர்ச்சையான நிலையில் ரூபாலி சக்கங்கர், மகளிர் ஆணைய தலைவி பதவி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக செய்வதாக ரூபாலி சக்கங்கர் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *