சென்னை, மார்ச் 22 ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மாற்று நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதில் இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் நகோட்கா (Nakhodka) துறைமுகத்திலிருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் நேற்று (21.3.2026) சென்னை துறைமுகம் வந்தடைந்தது. அடுத்த கப்பல் வருகை: ரஷ்யாவிலிருந்து மற்றொரு கச்சா எண்ணெய் கப்பல் வரும் மார்ச் 24-ஆம் தேதி சென்னை வரவுள்ளது.
தற்போதைய கையிருப்பு: சென்னை துறைமுகத்தில் தற்போது 6.50 லட்சம் டன் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது.
வழக்கமான வரத்து: பொதுவாக சென்னை துறைமுகத்திற்கு மாதம் நான்கு கப்பல்கள் மூலம் 10 லட்சம் டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படும்.
தட்டுப்பாடில்லை: இந்த மாத இறுதிக்குள் மேலும் இரண்டு கப்பல்கள் வரவுள்ளதால், கச்சா எண்ணெய் விநியோ கத்தில் எந்தவித தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பில்லை என சென்னை துறைமுக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
