


கடந்த 19, 20.03.2026 ஆகிய இரு நாட்கள் புதுடில்லியில் உள்ள டான் போஸ்கோ தொழில்நுட்பக் கல்விக் கூடத்தில் “தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் நூறு ஆண்டுகள் – சிறப்பு பன்னாட்டு மாநாடு” நடைபெற்றது. தொடக்கவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார். தேசியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆய்வு மாணவர்கள் உள்ளிட்டோர் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பங்கேற்றனர். நிறைவுவிழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று உரையாற்றினார். (விரிவான செய்தி நாளை)
