சண்டிகர் ஏப். 10- பஞ்சாபில் மே 2ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசு அலுவலகங்கள் இயங்கும் என முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று (9.4.2023) வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது:
பஞ்சாபில் மின் நுகர்வு மதியம் 1.30 மணிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்கு கிறது. அரசு அலுவலகங்களை மதியம் 2 மணிக்கு மூடினால், மின் நுகர்வு அதிகரிப்பதை 300 முதல் 350 மெகா வாட் வரை குறைக்க முடியும். இது குறித்து அரசு ஊழியர்களுடன் ஆலோ சனை நடத்தப்பட்டது. பஞ்சாப் அரசு அலுவலகங்கள் தற் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது.
இந்த பணி நேரத்தை மே 2ஆம் தேதி முதல் காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மாற்ற பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம் ஜூலை 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
அரசு அலுவலகங்களில் செய்யப் படும் இந்த பணி நேர மாற்றத்தால், கோடை காலத்தில் மின் தேவை அதிகரிப்பை குறைக்க முடியும். நானும் எனது அலுவலகத்துக்கு காலை 7.30 மணிக்கு செல்வேன்.
-இவ்வாறு அவர் கூறினார்.