அடிபட்ட பார்ப்பனியப் பாம்பு வாய்ப்பிற்காக காத்திருக்கிறது!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சமூகவலைதளத்தில் பார்ப்பனர்கள் இருபாலரும் மெல்ல மெல்ல தங்களின் நச்சு சிந்தனைகளை தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சியில் வந்ததில் இருந்தே வெளிப்படையாகவே அவர்கள் ‘‘தீண்டாமை வேண்டும் – அதை சட்டம் கொண்டு நிறைவேற்ற வேண்டும்’’, என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை சாதாரண ஒரு சமூகவலைதளப் பயனாளியின் தனிப்பட்ட கருத்து என்று ஒதுக்கி விட முடியாது. பெரிய சக்தி வெளிப்படையாகப் பேச முடியாததை இவர்களை விட்டுப் பேச வைக்கிறது என்றுதான் கருத வேண்டும்.

கருநாடகாவைச் சேர்ந்த ஆர்த்தி அய்யங்கார் என்பவர் எழுதிய ஆங்கில சமூகவலைதளப் பதிவின் தமிழாக்கம் கீழே காண்க!

‘‘சூத்திரர்களுக்கு என் தாத்தா பாட்டி கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைத் தடுத்து வைத்திருந்தார்கள். காரணம், நாம்  தரம் குறைந்த சூத்திரர்களுடன் சேர்ந்து போட்டிபோடுவதா என்ற எண்ணம் அவர்களுக்கு.

சூத்திரர்கள் இன்று புலம்புவது போல் என் தாத்தா பாட்டிக்கு உள்ள அதே சமூகச்சூழல் – என்னிடம் நிஜமாகவே அந்தச் சலுகை இருந்திருந்தால்,  நான் ஏன் அவர்களுடன் படித்துப் போட்டியிட்டு நேரத்தை வீணடிக்கப் போகிறேன்?

நீதிமன்றங்களே,  தயவு செய்து தீண்டாமையை மீண்டும் கொண்டு வர முடியுமா? – முடியும் என்றால் சூத்திரர்கள் என்னிடம் பேசவோ அல்லது என்னைப் பார்க்கவோ சமூகவலைதளங்களில் என்னோடு விவாதம் நடத்தாதபடி அதைச் செய்யுங்கள்.”

இதைப் படிக்கும் போது, எவ்வளவு மரத்துப்போன பார்ப்பனரல்லாதாராக இருந்தாலும், அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் சூத்திரர்களாக இருந்தாலும் கோபம் பீறிட்டுக் கிளம்பாதா? குருதி சூடேறாதா?

இந்த 2026இலும் பார்ப்பனர்கள் மனப்பான்மை எவ்வளவு வருணாசிரம வெறி, வீறு கொண்டு நிற்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தரம் தாழ்ந்த சூத்திரர்களுடன் போட்டிப் போடும் நிலை கூடாது என்பதால்தான் சூத்திரர்களுக்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டதாம்.

அந்த நிலை மீண்டும் வர வேண்டுமாம். தீண்டாமையைக் கொண்டு வர வேண்டுமாம், அதற்கு நீதிமன்றங்கள் ஒத்துழைக்க வேண்டுமாம்.

இவர்களை அடையாளங் கண்டு, சட்டப்படியான தண்டனையை வழங்க வேண்டாமா?

‘தீண்டாமை’ என்று பார்ப்பனர்கள் கூறுவது – ஒரு குறியீடு – அம்மட்டே! ஒட்டுமொத்த பார்ப்பனரல்லாதார் அனைவரையும் சுட்டிக் காட்ட அது ஒரு குறியீடு சொல் – அவ்வளவுதான்.

தரம் தாழ்ந்த சூத்திரர்களாம் – அவர்களோடு போட்டிப் போட பார்ப்பனர்கள் விரும்பவில்லையாம். சபாஷ்! இந்த நிலையை வரவேற்கிறோம்.

ஆனாலும் தங்களின் பிச்சை எடுக்கும் தொழிலை, கருமாதி இத்தியாதித் துறைகளில் அவர்கள் ஈடுபடுவதை யார் தடுக்கிறார்கள்?

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இடஒதுக்கீடு என்ற ஒன்றைத் துப்புர ஒழித்துக் கட்டி, முழுச்சுளையாக எல்லாவற்றையும் விழுங்க வேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் மனப்பான்மை.

‘உயர் ஜாதி’ என்று கூறிக் கொண்டு தாழ்ந்த மனப்பாங்கைக் கொண்டவர்கள்தான் இவர்கள் – புரிந்து கொள்வீர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *