தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், ‘‘அன்னை மணியம்மையார் நினைவு நாள் – 2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’’ எனும் தலைப்பில், கடந்த 16.03.2026 அன்று மாலை 6 மணிக்கு, மேற்கு தாம்பரத்தில் உள்ள பெரியார் நகர் – பாரதி திடல் சண்முகம் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தலைமை ஏற்க, மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் ஆ.இர.சிவசாமி அனைவரையும் வரவேற்றார். சி.பி.எம். தொகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆதிமாறன், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்கள் – வழக்குரைஞர்கள் சே.மெ.மதிவதனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகி யோர் முன்னிலை வகித்து உரையாற்றி னர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், வி.சி.க. மாவட்ட செயலாளர் – பொறியாளர் ப.சாமுவேல் எபினேசர், ம.தி.மு.க. தாம்பரம் பகுதித் தலைவர் துரை.மணிவண்ணன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குனர் பசும்பொன் செந்தில்குமாரி, பொதுக்குழு உறுப்பினர் மோகன்ராஜ், மாவட்டத் தொழிலாளர் அணி தலைவர் மா.குணசேகரன், கழக மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் இறைவி, பெரியார் பெருந்தொண்டர் வெ.ஞானசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நிறைவாக அருணா பத்மசூரன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
கழகப் பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, பெரியார் மாணாக்கன், மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்ட றம், ப.கோபாலகிருஷ்ணன், கூடு வாஞ்சேரி துரை ஜெயக்குமார், உத்ரா, வெண்ணிலா, புஷ்பலதா பூங்கொடி, ஆவடி நகரச் செயலாளர் இ.தமிழ்மணி, சிலம்பரசன், முடியரசன், அறிவுச்சுடர், மதியழகன், மணிமாறன், மா. சமத்துவமணி, வழக்குரைஞர் துரை.அருண், துரை.இராவணன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், திருமுல்லைவாயில் இரணியன், குன்றத்தூர் சரவணன், திருமலை, கரிகாலன், தனசேகரன், தி.மு.க. காமராஜ், தி.செ.கணேசன், ஊடகவியலாளர் முரளி கிருஷ்ணன் சின்னதுரை, சி.மெர்சி ஏஞ்சலா மேரி, சி.அமலசுந்தரி, சிராந்தி, மோனிசா மற்றும் அனைத்து கட்சிகளையும் சார்ந்த தோழர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கழகத் தலைவரின் கருத்துகளை கேட்டுப் பயன்பெற்றனர்.
தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்’’ சிறப்புக் கூட்டம்!
Leave a Comment
