தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசாணைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 19 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதிய அரசாணைகளை வெளியிடுவதற்கு முன்பாக அவற்றை ஆய்வு செய்யத் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட் டுள்ள அரசாணையில் கூறப்பட்டி ருப்பதாவது:

ஆய்வுக் குழுவின் கட்டமைப்பு அரசாணைகளை ஆய்வு செய் வதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புப் பணிக்குழுவில் பின் வரும் அதிகாரிகள் இடம்பெறுவர்:

தலைவர் – தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர். உறுப் பினர்கள் – பொது மற்றும் மறு வாழ்வுத்துறை முதன்மைச் செய லாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்.

செயல்முறை மற்றும் கட்டுப் பாடுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தக் காலகட்டத்தில், எந்தவொரு புதிய திட்டமோ அல்லது அரசா ணையோ பிறப்பிக்கப்பட வேண்டு மானால், அது கீழ்க்கண்ட நிலை களைக் கடக்க வேண்டும்.

முன்மொழிவு சமர்ப்பித்தல்

அரசுத் துறைகள் தாங்கள் பிறப்பிக்க விரும்பும் அரசாணைகள் குறித்த முன்மொழிவை முத லில் இந்த ஆய்வுக் குழுவின் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும். குழுவின் ஆய்வு: தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு அந்த முன்மொழிவுகளை விரிவாக ஆய்வு செய்து அனுமதி அளிக்கும்.

தேர்தல் ஆணைய ஒப்புதல்

ஆய்வுக் குழுவின் பச்சைக் கொடி கிடைத்த பிறகு, அந்த கோப்புகள் தமிழ்நாடுத் தலைமைத் தேர்தல் அதிகாரி வாயிலாக இந் தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்.

இறுதி அனுமதி

தேர்தல் ஆணையம் அனுமதி அளித்த பிறகே சம்பந்தப்பட்ட அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தேவைப்படும் நேரங்களில் எல்லாம் இந்த ஆய்வுக் குழு கூடி முடிவுகளை எடுக்கும் என அந்த அரசாணையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் ஏதுமின்றி அரசின் நிர்வாகப் பணிகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *