தமிழ்நாட்டில் தேர்தல் பணியில் ஈடுபடும் 4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 19 தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று (18.3.2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சம் தேர்தல் பணியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு பங்கு தாரர்களுக்கு விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், செலவின கண்காணிப்பு குழுக்கள், வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் தேர்தல் நடைமுறையில் முழுமையான பயிற்சி அளிக்கும் வகையில் இந்த பயிற்சி திட்டங்கள் வடிவமைக் கப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி திட்டங்கள் தொடங்குவதற்கு முன்னதாக, முக்கிய பங்குதாரர்களின் திறன், அறிவு மற்றும் தயார்நிலை ஆகியவற்றை மதிப்பிடுவதற்காக இந்திய பன்னாட்டு ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் மூலம் மதிப்பீடுகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, முதற்கட்ட மாநில அளவிலான பயிற்சிகள் நடத்தப்பட்டது.

அதன்படி,

l மாவட்ட தேர்தல் அதிகாரி களுக்கு தேர்தல் நடத்துதல் குறித்து கடந்த 9, 10ஆம் தேதி பயிற்சி வழங்கப்பட்டது.

l தேர்தல் நடத்தும் அதி காரிகள்/ உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்துதல் குறித்து கடந்த 3ஆம் தேதி, 4ஆம் தேதி பயிற்சி வழங்கப்பட்டது.

l தேர்தல் நடத்தும் அதிகாரி களுக்கு தொழில்நுட்ப பயன்பாடு குறித்து கடந்த 6ஆம் தேதி பயிற்சி வழங்கப்பட்டது.

l மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கு 24.2.2026, 25.2.2026 பயிற்சி வழங்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் போன்ற மாவட்ட மற்றும் கள அளவிலான தேர்தல் செயல்பாட்டாளர்களுக்கு பயிற்சிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட அளவிலான பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தற்போதைய அறிவுறுத்தல்களின்படி, அவர்களின் நடைமுறை அறிவை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் 6,803 மண்டல அதிகாரிகள், 75,032 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 2,25,096 வாக்குச்சாவடி அலுவலர்கள் உட்பட சுமார் 4 லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நிலைகளிலும் உள்ள தேர்தல் தொடர்புடைய அலுவ லர்கள் முறையாக பயிற்சி பெற்று, தேர்தலை சுதந்திரமான, நியாயமான மற்றும் திறமையான முறையில் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்தி கொள்வதை உறுதி செய்வதே இந்த பயிற்சி திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *