‘திராவிட மாடல்’ அரசுக்கு மகுடம் சூட்டும் விதமாக ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் குஜராத், மகாராட்டிராவை பின்னுக்கு தள்ளியது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 19 தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ அரசுக்கு மகுடம் சூட்டும் விதமாக, 2024-2025ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி, தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஜவுளி ஏற்றுமதியில்
தமிழ்நாடு சாதனை

தொழில்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான தொழில் கொள்கைகள், ஜவுளித்துறைக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள், தடையற்ற மின்சாரம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்தியதன் நேரடி விளைவாகவே இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது. ‘NIRYAT’ தரவுகளின் அடிப்படையில் வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, 2024-2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 7,997.17 மில்லியன் டாலர்களாக பதிவாகி, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் நெருங்க முடியாத உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலமான 2020-2021ஆம் ஆண்டில் 6,193.39 மில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்த தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் அபரிமிதமான எழுச்சியை கண்டுள்ளது. அரசின் சார்பாக திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட ஜவுளி மய்யங்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த நடவடிக்கைகளால், ஏற்றுமதி முந்தைய ஆண்டுகளை விட 29 சதவீதம் என்ற பிரமாண்ட வளர்ச்சியை பதிவு செய்து 7,997.17 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. தொழில் வளர்ச்சியில் தங்களை முன்னணி மாநிலங்களாக காட்டிக் கொள்ளும் குஜராத் மற்றும் மகாராட்டிராவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனது சிறப்பான செயல்பாடுகளால் வெகுவாக பின்னுக்கு தள்ளியுள்ளது.

இப்பட்டியலில், தமிழ்நாடு – 7,997.17 மில்லியன் டாலர்கள் (முதலிடம்), குஜராத் – 5,646.01 மில்லியன் டாலர்கள் (இரண்டாம் இடம்), மகாராஷ்டிரா – 3,831.28 மில்லியன் டாலர்கள் (மூன்றாம் இடம்), உத்தரபிரதேசம் – 3,679.5 மில்லியன் டாலர்கள் (நான்காம் இடம்) என உள்ளன. குஜராத்தை விட தமிழ்நாடு சுமார் 2,351 மில்லியன் டாலர்கள் அளவுக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்து, இந்தியாவின் ஜவுளி தலைநகரம் தமிழ்நாடுதான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

பிற மாநிலங்களின் நிலையை பொறுத்தவரை மத்திய பிரதேசம் (1,324.97), மேற்கு வங்கம் (921.95), ராஜஸ்தான் (855.37) போன்ற மாநிலங்கள் பல மடங்கு பின்தங்கியுள்ளன. தென்னிந்தியாவில் ஆந்திரா (506.42), கேரளா (434.14), தெலங்கானா (111.09) ஆகிய மாநிலங்களை விட தமிழ்நாடு மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறது. எளிதான தொழில் தொடங்கும் சூழல், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்க்கப்பட்ட பல்லாயிரம் கோடி முதலீடுகள், புதிய மினி ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் திட்டம் போன்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முன்னெடுப்புகளே இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன.

பொருளாதார வல்லுநர்கள் பாராட்டு

கப்பல் மற்றும் விமான போக்குவரத்து மூலம் பன்னாட்டு அளவில் கொடிகட்டி பறக்கும் தமிழ்நாட்டின் இந்த ஜவுளி ஏற்றுமதி சாதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள ‘2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற இலக்கை நோக்கித் தமிழ்நாடு அசுர வேகத்தில் முன்னேறி வருவதற்கான மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது எனப் பொருளாதார வல்லுநர்களும், தொழில் துறையினரும் பாராட்டி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *