ஆவடி கழக மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரபடுத்த தீர்மானம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆவடி, மார்ச் 19- ஆவடி மாவட்ட திராவிடர் கழக  கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகையில் 15.3.2026 அன்று மாலை 06-00 மணிக்கு பாடி துரை ராவணன் அவர்கள் கடவுள் மறுப்பு கூற மாவட்ட கழக செயலா ளர் க.இளவரசன் ஒருங் கிணைப்பில் மாவட்ட கழகத் தலைவர் வெ.கார் வேந்தன் தலைமையில் நடைபெற்றது.

முதலில் ஆவடி மாவட்ட கழகத் தோழர் ஆவடி தேவி நகர் புருசோத் தமனின் தந்தையார் சம்பத் 19.2.2026 அன்று காலமானார். அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் விதமாக மாவட்ட கழகம் சார்பாக இரண்டு நிமிடம் அமைதி காக்கப்பட்டது.தொடர்ந்து 25-02-2026 அன்று ஆவடியில் மாவட்ட கழகம் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிறப்புரையுடன் நடை பெற்ற கூட்டத்தின் வரவு- செலவு கணக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த அனைத்து தோழர்களுக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.

‘பெரியார் உலக’த் திற்காக தலைமைக் கழகத்தால் ஆவடி மாவட்டக் கழகத்திற்கு நிர்ண யிக்கப்பட்ட ரூபாய் பத்து இலட்சத்தையும் (10,00,000) தாண்டி பத்து இலட்சத்து எழுபத்தோராயிம் (10,71,000) வழங்குவதற்கு உறுதுணையாக இருந்த மாவட்டக் கழகத்தின் அனைத்துத் தோழர்களுக்கும், நிதி வழங்கி ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மாவட்ட கழகம் சார்பாக பாராட்டும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

ஆவடி மாவட்ட திராவிடர் கழக  வளர்ச்சிக்காக மாதம் ரூபாய் நூறு வழங்கும் விதமாக  நூறு உறுப்பினர்களை சேர்க்க தீவிர முயற்சி மேற்கொள்வது, விடுதலை சந்தா சேர்ப்பதில் கவனம் செலுத்துவது.

மேற்கண்ட தீர்மானங் களையொட்டி மாவட்ட கழக துணைத்தலைவர் மு.ரகுபதி, இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், திருமுல்லைவாயல் பகுதிக் கழக தலைவர் இரணியன், ஆவடி நகர கழக செயலாளர் இ.தமிழ்மணி, மாவட்ட கழக வழக்குரைஞரணி அமைப்பாளர் பன்னீர் செல்வம், மதுரவாயல் பகுதி கழக தோழர் பிரகாஷ், ஆவடி நகர கழக தோழர்கள் ச.புரு சோத்தமன், நடராஜன், ப.வெங்கடேசன், சுந்தர் ராஜன், கொரட்டூர் புஷ்பா, திருவேற்காடு அபிஷேக், பட்டரவாக்கம் ரவிச்சந்திரன் ஆகியோர் உரையாற்றிய பின் மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் நிறைவு ரையாற்றினார்.

கூட்டத்தில் பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா.வேல்முருகன், பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் சென்னகிருட்டிணன், திருநின்றவூர் பகுதி கழக இளைஞரணி அமைப் பாளர் ம.சிலம்பரசன், பெரியார் பிஞ்சு அருள் விழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட கழக துணைச்செயலாளர் பூவை.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *