சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நாளிதழ் செய்தியாளர் உடல் உறுப்புக் கொடை மாவட்ட ஆட்சியர் மாலை வைத்து அரசு மரியாதை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கிருஷ்ணகிரி, மார்ச் 19- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் , மனிதநேய சிந்தனையாளர், பத்திரிகை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர், மூத்த பத்திரிகையாளர் என்.அன்பரசு (வயது 56)  ஆவார்.

செய்தி சேகரிப்புக்காக கடந்த 15ஆம் தேதி காலை செய்தி சேகரிக்கும் பணியை மேற்கொண்டு பாலக்கோடு நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது கருக்கன்சாவடி பாரதி கோவில் அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்த இவர்  சிகிச்சைக்காக  கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,  சிகிச்சை பலனின்றி மரணமுற்றார். இறந்த இவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு கொடையாக அளிக்கப்பட்டன.

அரசு மரியாதை

உடல் உறுப்புகள் கொடை வழங்குபவர் களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்கிற முறையில் மருத்துவமனையில் வைக்கப்பட்ட அன்பரசின் உடலுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் மாலை வைத்து அரசு மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிகையாளர்கள், சங்க நிர்வாகிகள், ஒளிப் படக் கலைஞர் சங்க நிர்வாகிகள்  மரியாதை செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *