வீடுகளில் மரணம் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்! தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை உத்தரவு

1 Min Read

சென்னை, மார்ச்.19  தமிழ்நாட்டில் வீடுகளில் நிகழும் உயிரிழப்புகளுக்கும் முறையான மருத்துவக் காரணங்களைக் கண்டறிந்து, மருத்துவர் மூலம் உறுதி செய்யப்பட்ட இறப்புச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையைச் செயல்படுத்த பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சராசரியாக 6.96 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகின்றன.

பொது சுகாதாரத் துறையின் தரவுகளின்படி:

23% உயிரிழப்புகள் மருத்துவமனைகளில் சிகிச்சையின் போது ஏற்படுகின்றன. 73% உயிரிழப்புகள் வீடுகளிலேயே நிகழ்கின்றன. 4% உயிரிழப்புகள் எதிர்பாராத விபத்துகளால் ஏற்படுகின்றன. தற்போது வீடுகளில் உயிரிழப்போர் பலருக்கு “வயது மூப்பு” அல்லது “இயற்கை மரணம்” என்றே பொதுப்படையாகப் பதிவு செய்யப்படுகிறது. இதனால் துல்லியமான மரணக் காரணங்களைக் கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது.

மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து, அந்தந்தப் பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை தடுப்புப் பணிகளை மேற்கொள்ள இந்த ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, கரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2023-ஆம் ஆண்டில் இறந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆகியவற்றுடன் இணைந்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன:

வயது மூப்பால் இறந்ததாகக் கருதப்பட்டவர்களில் 98% பேருக்கு மரணத்திற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் 20% பேர் இதய நோய்களாலும், 7% பேர் நீரிழிவு நோய் தொடர்பான பாதிப்புகளாலும் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில், இனி வரும் காலங்களில் வீடுகளில் உயிரிழப்பு நேர்ந்தாலும், ஒரு மருத்துவர் மூலம் மரணத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் முறையை மாநிலம் முழுவதும் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் எந்த வகையான நோய்களால் அதிக மரணங்கள் நிகழ்கின்றன என்பதை அறிந்து அங்கு மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். மரணப் பதிவுகளில் நிலவும் துல்லியமற்ற தன்மையைத் தவிர்க்க முடியும்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *