வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் 12 மாற்று ஆவணங்கள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 18 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கையில் இல்லாதவர்கள், தேர்தலின் போது தங்களின் அடையாளத்தை நிரூபிக்க 12 விதமான மாற்றுப் புகைப்பட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதியாகும். இந்த நிலையில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வாக்களிக்க அனுமதிக்கப்படும்
12 மாற்று ஆவணங்கள்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு அசல் ஆவணத்தைக் காண்பித்து வாக்களிக்கலாம்:

  • ஆதார் கார்டு (Aadhaar Card)
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பணி அட்டை
  • வங்கி அல்லது அஞ்சலகத் தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகங்கள் (Passbooks)
  • தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டு (Health Insurance Smart Card)
  • ஓட்டுநர் உரிமம் (Driving License)
  • பான் கார்டு (PAN Card)
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் (NPR) கீழ் இந்தியப் பதிவாளர் ஜெனரலால் (RGI) வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
  • இந்திய கடவுச்சீட்டு (Indian Passport)
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் (Pension Document)
  • ஒன்றிய/மாநில அரசுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள்
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் /சட்டமன்ற உறுப்பினர்கள்/சட்ட மேலவை உறுப்பினர் களுக்கு வழங்கப்பட்ட அதி காரப்பூர்வ அடையாள அட்டைகள்
  • ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப் பட்ட தனித்துவமான மாற்றுத் திறனாளி அடையாள அட்டை (UDID Card)

வாக்களிக்கச் செல்லும் நபர் மேற்கண்ட ஆவ ணங்களை வைத்திருந்தாலும், அவருடைய பெயர் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது கட்டாயம். பெயர் பட்டியலில் இருந்தால் மட்டுமே இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.

பெண்களுக்கான  சிறப்பு ஏற்பாடுகள்

பர்தா அணியும் பெண்கள் மற்றும் முக்காடு அணியும் பெண்களின் அடையாளத்தைச் சரிபார்க்க, வாக்குச் சாவடிகளில் பெண் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் தனிப்பட்ட இட வசதி மற்றும் கண் ணியமான முறையில் சரிபார்ப்பு நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்ய தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *