மும்பையில் சுயமரியாதைச்சுடரொளி அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆவது ஆண்டு நினைவு நாள்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை, மார்ச் 18- அன்னை மணியம்மையார் அவர்களின் 48-ஆவது ஆண்டு நினைவு நாள் “சுயமரியாதைச் சுடரொளிகள் ” நாள் கூட்டம் மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், தாராவி கலைஞர் மாளிகையில் நடை பெற்றது.

நிகழ்வுக்கு மும்பை திரா விடர் கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக மும்பை திராவிடர் கழக துணைச் செயலாளர் அ.கண்ணன் அனைவரையும்   வரவேற்று உரையாற்றினார்.

அன்னையாரின் படத் துக்கு மும்பை திமுக முது பெரும் தலைவர் என். வி.சண்முக ராசன், முலுண்ட் ஆ.பாலசுப்பிர மணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

கூட்டத் தலைவர் பெ.கணேசன் தமது உரையில் அன்னையாரின் தியாக வாழ்க்கையையும், ஈடு இணையற்ற தொண்டையும் விரிவாக நினைவு கூர்ந்து பேசினார்.

தொடர்ந்து தோழர்கள் மனிதநேய இயக்கத்தைச் சார்ந்த சங்கர் திராவிடர், அழகுராஜா,திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தை சார்ந்த தோழர் ந. ராதாகிருஷ்ணன், மும்பை திராவிடர் கழக பொருளாளர் பெரியார் பாலா, ஜெய்பீம்பவுண்டேஷன் நிர்வாகி வனிதா இளங்கோவன், மகிழ்ச்சி மகளிர் பேரவை நிர்வாகி க. வளர்மதி, மும்பை திராவிடர்கழக துணைத் தலைவர் இ.அந்தோணி, மும்பை திமுக மகளிரணியைச்சேர்ந்த சுகுணா அன்பழகன், மும்பை திராவிட முன்னேற்றக் கழக தோழர் க.இராஜன், மும்பை திராவிட முன்னேற்ற கழக பொறுப்பு குழு உறுப்பினர் அன்பழகன் பொற்கோ, மும்பை மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர்  சு.சாலமன்ராஜா ஆகியோர் உரைக்குப் பிறகு இறுதியாக மும்பை பகுத்தறிவாளர் கழக தலைவர் அ. இரவிச்சந்திரன் அன்னை மணியம்மையார் அவர்களின்ஈடு இணையற்ற தொண்டுள்ள வாழ்க்கையை   விரிவாகப் பேசி உரையை நிறைவு செய்தார். மும்பை திராவிடர் கழக செயலாளர் ஜே.வில்சன் நன்றி கூறினார்.

நிகழ்வில் மும்பை திராவிடர் கழகத்தை சார்ந்த மூத்த உறுப்பினர் சோ.ஆசைத்தம்பி, க.அண்ணாதுரை, கோ.வேணு செல்வம், காமராஜ் தொல் காப்பியன் சி.குப்புசாமி க.அறிவுமதி,க. சஞ்சய், க.விக்ரம் மகிழ்ச்சி மகளிர் பேரவை சார்ந்த மகாதேவி, காவியா, வெண்ணிலா, முத்துலட்சுமி, சுயம்பு லட்சுமி,சிவரஞ்சனி, ஆதிசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர், வந்திருந்த அனைவருக்கும் தேநீர் மற்றும் இரவு உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *