இன்று எனக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் முன்னாள் அமைச்சர் உதயகுமார். அவரின் பெயரைச் சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. பழனிசாமி குறித்து நான் பேசக்கூடாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அ.தி.மு.க.வை குழிதோண்டிப் புதைத்தது எடப்பாடி பழனிசாமியும், உதயகுமாரும் தான். எனக்கு எச்சரிக்கை விடுக்க உதயகுமாருக்கு என்ன தகுதி இருக்கிறது? எடப்பாடியும், உதயகுமாரும் மண்வெட்டியை எடுத்து அதிமுகவை குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். அ.தி.மு.க.வை அழித்த வரலாற்றுப் பெருமை எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயகுமாரையே சாரும்!
– ஒ.பி.எஸ்.
