பிஜேபி அரசின் மக்கள் விரோதம்! தமிழ்நாட்டில் 66 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 17- தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள, 77 சுங்கச் சாவடிகளில் 66இல், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணங்களை மாற்றியமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. மற்ற சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும். இந்த ஆண்டுக்கான கட்டண உயர்வு 5 முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் வகையில், ‘பாஸ்டேக்’ முறை 2016இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது, 2021ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதில் கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்கள் அடிக்கடி பயன்படுத்துவதற்காக ஆண்டுக் கட்டண முறையை, கடந்த ஆண்டு சுதந்திர நாளன்று ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. ஒன்றிய அரசு தரவுகளின்படி, இதுவரை சுமார் 11.86 கோடி பாஸ்டேக் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில், ஏறக்குறைய 5.9 கோடி பாஸ்டேக்குள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. தற்போது, தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தில், 98 சதவீதம் இந்த முறையிலேயே கிடைக்கிறது.இதற்கிடையே, தமிழ்நாட்டில், 66 சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம், வரும், 1.4.2026ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.

இதன்படி, தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு 10 முதல் 40 ரூபாய் வரையும்; சரக்கு வாகனம், பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு 50 முதல் 200 ரூபாய் வரை கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல் மாதாந்திர பாஸ் கட்டணம், 300 முதல் 350 ரூபாய் வரை அதிகரிக்கப்பட உள்ளன. இதற்கிடையே, நாடு முழுதும், வாகனங்களுக்கான ‘பாஸ்டேக்’ ஆண்டுக் கட்டணம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல், 3,000இல் இருந்து 3,075 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *