செயற்கை நுண்ணறிவு இயந்தி ரத்திற்கும் சிந்திக்கும் திறனை கற்றுக் கொடுத்து விட்டோம் – உச்ச நீதிமன்ற நீதிபதி
எம்.எம்.சந்தோஷ் ஆதங்கம்.
அந்தமானையும், தமிழ்நாடு என்று கூறுவார்களோ!
அந்தமான் தீவு அருகே இந்திய கட லோர காவல் படையினர் படகு ஒன்றை சோதனையிட்டபோது கஞ்சா பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 6000 கிலோ எடையுடன் இருந்த இந்தப் போதைப் பொருளின் சந்தை மதிப்பு 36,000 கோடி ரூபாய்.
தமிழ்நாட்டில் தான் போதைப் பொருள் நடமாட்டம் என்று சொல்பவர்கள், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? ஒருக்கால் அந்தமானும் தமிழ்நாட்டைச் சார்ந்தது என்று எப்போதும்போலச் சொல்வார்களோ?
தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்!
கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த மாணவர்கள், ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்; தனியார் நிறு வனங்களிலும் பெரும்பாலும் வட இந்தி யர்களே பணியாற்றுகிறார்கள். இதனை வெறுக்கவே இந்த ஹிந்தி அழிப்பு நடவ டிக்கை என்று அந்த மாணவர்கள் கூறினர்.
