டிரம்பின் ஆபத்தான அணுகுமுறை உலகை ஒரு பேரழிவு யுத்தத்திற்கு அழைத்துச் செல்கிறது ‘நியூயார்க் டைம்ஸ்’ எச்சரிக்கை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நியூயார்க், மார்ச் 14– உலகம் ஒரு புதிய மற்றும் மிகவும் ஆபத்தான அணு ஆயுத யுகத்திற்குள் (Dangerous new nuclear age) நுழைந்து கொண்டிருப்பதாகவும், அமெ ரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பின் அணுகுமுறை மிகவும் கவலைக் குரியதாக இருப்பதாகவும் ‘நியூயார்க்  டைம்ஸ்’ இதழின் ஆசிரியர் குழு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அணு ஆயுதப் போட்டி

கட்டுப்பாடற்ற  அணு ஆயுதப் போட்டி பனிப்போர் காலத்திற்குப் பிறகு, அணு ஆயுதங்களைக் கட்டுப் படுத்த உருவாக்கப்பட்ட பன்னாட்டு ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாகச் சிதைந்து வரும் நிலையில், உலகம் தற்போது “கட்டுப்பாடு களற்ற ஒரு யுகத்தை”  நோக்கி நகர்ந்து வருகிறது.

ஈரான் மீதானத் தாக்குதல்கள் மற்றும் ரஷ்யா-சீனா உடனா னப் பதற்றங்களுக்கு மத்தியில், அணு ஆயு தங்களின் பயன்பாடு குறித்த அச்சம் மீண்டும் உலக நாடுகளிடையே மேலோங்கியுள்ளது.

டிரம்ப்பின் “அதிர்ச்சியூட்டும்” அணுகுமுறை

இந்த நெருக்கடியான காலக் கட்டத்தில்  “இந்த புதிய யுகத்தை எதிர்கொள்ளும் டிரம்ப்பின் அணுகுமுறை அவரது வார்த்தை களிலும், அவர் கையா ளும் முறைகளிலும்  ஒரே நேரத்தில் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.”   அணு ஆயுதங்களை ஒரு மிரட்டல் கரு வியாகப் பயன்படுத்துவதும், ராஜதந்திரப் பேச்சுகளுக்குப் பதிலாக ராணுவ வலிமை யைப் பறைசாற்றும் விதமான கருத்துகளை வெளியிடுவதும் நிலைமையை மேலும் மோசமாக்கும்.

குறிப்பாக, அணு ஆயுதக் கட்டுப்பாட்டு விவகாரங்களில் டிரம்ப் காட்டும் அலட்சியம் மற்றும் பொறுப்பற்றப் பேச்சுகள் உலக நாடுகளை ஒரு பாதுகாப்பற்றச் சூழலுக்குத் தள்ளி விட்டது. ஒரு காலத்தில் அணு ஆயுதப் பரவலைத் தடுக்க அமெரிக்கா தலைமையேற்று நடத்தியப் போராட்டங்கள், தற்போது டிரம்ப்பின் நிர்வாகத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. அணு ஆயுதக் கட்ட மைப்பை நவீனப்படுத்துதல் என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களைச் செலவிடுவதும், மற்ற நாடுகளுடனானப் பேச்சு வார்த்தைகளைப் புறக்கணிப்பதும் நீண்ட கால அடிப்படையில் உலகை ஒரு பேரழிவுப் போருக்கு இட்டுச் செல்லும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *