தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
புலவர் பா. வீரமணி தான் எழுதிய “நாக்-அவுட் வட சென்னையின் குத்துச்சண்டை வீரர்கள் ” புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் மாற்றுக்கலம் பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் பகத். (10.04.2023, பெரியார் திடல்).
பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர்
தமிழர் தலைவருடன் சந்திப்புதமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் ஏ.பி.ஆர்.கதிரவன், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.செல்வம், மாநில பொருளாளர் சி.கருணா, மாநிலத் துணைத் தலைவர் பி.பழனிசாமி, மாநிலத் துணைச் செயலாளர் டி.ஆர்.ராஜேந்திரன், பி.அரங்கநாதன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து ஒன்பது கோரிக்கைகளைக் கொண்ட மனுவை வழங்கினர். (10.4.2023, பெரியார் திடல்).
தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்
தாம்பரத்தைச் சேர்ந்த சிவகுமார் சண்முகம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 5 விடுதலைச் சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 10,000 வழங்கினார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் தமிழ்செல்வன். (10.04.2023 , பெரியார் திடல்)