11.4.2023
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகார் ராமநவமி வன்முறையை பஜ்ரங் தளம் வாட்ஸ்அப்பில் செய்தி பரப்பி திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பஜ்ரங் தள் தலைவர்களால் இயக்கப்படும் 454 பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் பலர் மார்ச் மாத இறுதியில் ராம நவமி ஊர்வலங்களை தொடர்ந்து பீகார்ஷரீப் நகரில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டி விசிறினர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
* இங்கு தமிழ்நாட்டில் பெரியாருடன் அம்பேத்கரின் தொடர்புகள், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதன்மைச் சட்டத்தின் சில முக்கியமான பக்கங்களில் நிச்சயம் பிரதிபலித்திருக்கலாம் என தான் நம்புவதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி பட்டு தேவானந்த் செய்தியாளர்களிடம் கருத்து.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உனே அரசிதழில் வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதன் நல்விளைவாக, சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த செய்தி வந்துள்ளது என முதலமைச்சர் கூறினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2024 ஆம் ஆண்டிற்கான உ.பி. கேம் திட்டத்தை பாஜக சோதனை ஓட்டமாக முதலில், உள்ளாட்சி தேர்தல் களில் துவக்கிட உள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொது இடங்களில் ஓபிசி பிரிவினரை கட்சி நிறுத்தவும், சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் இடங் களில் முஸ்லிம்களுக்கு டிக்கெட் வழங்கவும் வாய்ப்புள்ளது.
தி இந்து:
* இந்திய வரலாற்று காங்கிரஸ் பாடத்திட்டத்தில் மாற்றங்களை செய்திடும் என்.சி.இ.ஆர்.டி.-அய் கண்டிக் கிறது. வரலாற்றாசிரியர்கள் ‘வரலாற்றின் திரிபுகளுக்கு’ எதிராக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தல்.
– குடந்தை கருணா